இந்த ராசிக்கு இன்று புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்! இன்றைய ராசி பலன் 26-12-2020 Today Rasi Palan 26-12-2020

0
182

 

இன்றைய ராசி பலன்- 26-12-2020,

நாள் : 26-12-2020,

தமிழ் மாதம்:

மார்கழி 11, சனிக்கிழமை

 சுப ஹோரைகள்

காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இராகு காலம்: 

காலை 09.00-10.30,

எம கண்டம்:

மதியம் 01.30-03.00

குளிகன்:

காலை 06.00-07.30

திதி:

துவாதசி திதி பின்இரவு 04.19 வரை பின்பு வளர்பிறை திரியோதசி

நட்சத்திரம்:

பரணி நட்சத்திரம் பகல் 10.35 வரை பின்பு கிருத்திகை.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

மிதுனம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும்.

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வருமானம் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புடன் செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும்.

மீனம்

இன்று உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.

Previous articleதிமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்
Next articleஇந்தியாவிலேயே இளம் வயதில் மேயராகும் பெண்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here