இந்த ராசிக்கு இன்று பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெரும் நாள் ! இன்றைய ராசி பலன் 29-10-2020 Today Rasi Palan 29-10-2020

0
178

இன்றைய ராசி பலன்- 29-10-2020

நாள் : 29-10-2020

தமிழ் மாதம்:

ஐப்பசி 13, வியாழக்கிழமை

நல்ல நேரம்: 

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை

 எம கண்டம்:

காலை 6.30 முதல் 7.30 வரை

குளிகன்:

பகல் 9.00 முதல் 10.30 வரை

திதி:

திரியோதசி திதி பகல் 03.16 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.

நட்சத்திரம்:

உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 12.00 வரை பின்பு ரேவதி.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வருமானம் பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.

Previous articleபீகார் மாநில…! சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்…!
Next articleதேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here