இந்த ராசிக்கு இன்று இதுவரை வராத கடன்கள் வசூலாகும்! இன்றைய ராசி பலன் 07-12-2020 Today Rasi Palan 07-12-2020

0
235

 

இன்றைய ராசி பலன்- 07-12-2020

நாள் : 07-12-2020

தமிழ் மாதம்: 

கார்த்திகை 22, திங்கட்கிழமை

சுப ஹோரைகள்

மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இராகு காலம்: 

காலை 7.30 முதல் 9.00 வரை

எம கண்டம்: 

பகல் 10.30 முதல் 12.00 வரை

குளிகன்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை

திதி:

சப்தமி திதி மாலை 06.47 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

நட்சத்திரம்:

மகம் நட்சத்திரம் பகல் 02.32 வரை பின்பு பூரம்.

மரணயோகம் பகல் 02.32 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் பொறுப்புடன் செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்க முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறைந்து தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணம் உண்டாகும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் அமையும். பகைவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். அடுத்தவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.

 

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 

மீனம்

 

மீனராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். கொடுத்த கடன் வசூலாகும்.

Previous articleசூரப்பாவுக்கு ஆதரவளித்த பிரபலம்!
Next article8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள்! வாரத்தில் 6 நாட்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here