இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணக் கஷ்டம் குறையும். ! இன்றைய ராசி பலன் 11-01-2021 Today Rasi Palan 11-01-2021

0
210

 

இன்றைய ராசி பலன்- 11-01-2021,

நாள் : 11-01-2021,

தமிழ் மாதம்: 

மார்கழி 27, திங்கட்கிழமை

 சுப ஹோரைகள் 

மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இராகு காலம்:

காலை 07.30 -09.00,

எம கண்டம்: 

 10.30 – 12.00

குளிகன்: 

 மதியம் 01.30-03.00, 

திதி: 

 திரியோதசி திதி பகல் 02.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. 

நட்சத்திரம்: 

கேட்டை நட்சத்திரம் காலை 09.09 வரை பின்பு மூலம். 

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் மதியத்திற்கு பின் நற்பலன் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் குறையும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 09.09 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த காரியம் பாதியில் தடைபடும். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினை தீரும்.

 

.

Previous articleஇந்த ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம் ! இன்றைய ராசி பலன் 10-01-2021 Today Rasi Palan 10-01-2021
Next articleஇந்த ஒரு பொருள்! இத்தனை நன்மைகளை தருகிறதா? நம்பவே முடியலையே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here