இந்த ராசிக்கு இன்று வருமானம் பெருகும் நாள்! இன்றைய ராசி பலன் 12-10-2020 Today Rasi Palan 12-10-2020

0
45

இன்றைய ராசி பலன்- 12-10-2020
நாள் :  12-10-2020
தமிழ் மாதம்:
புரட்டாசி 26, திங்கட்கிழமை,
நல்ல நேரம்:
காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.
இராகு காலம்:
காலை   7.30 முதல் 9.00 வரை
எம கண்டம்:
பகல் 10.30 முதல் 12.00 வரை
குளிகன்:
பிற்பகல் 1.30 முதல் 3.00 வரை
திதி:
தசமி திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி
நட்சத்திரம்:
  ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு மகம்.
மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இன்று நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே இன்று உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம்.  தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே இன்று வேலை தேடுபவர்க்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும்.  வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முடிவுகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே இன்று நீங்கள் புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.
துலாம்
துலா  ராசிக்காரர்களே இன்று தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே இன்று சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிய பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலையில் எதிர்பாராத இடமாற்றத்தால் மன குழப்பம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும்.  சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.  உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே  இன்று எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். சகோதர சகோதரி மூலம் அனுகூலம் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.  அலுவலகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே  இன்று வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் கூட்டாளிகளின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் நிலையில் அசதி சோர்வு உண்டாகும்.

author avatar
Kowsalya