இந்த ராசிக்கு நினைத்த காரியம் நிறைவேறும் ! இன்றைய ராசி பலன் 12-11-2020 Today Rasi Palan 12-11-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 12-11-2020

நாள் : 12-11-2020

தமிழ் மாதம்: 

ஐப்பசி 27, வியாழக்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 11.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 1.30 முதல் 3.00 வரை

எம கண்டம்: 

காலை 6.30 முதல் 7.30 வரை

குளிகன்:

பகல் 9.00 முதல் 10.30 வரை

திதி:

இன்று துவாதசி திதி இரவு 09.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.

நட்சத்திரம்:

அஸ்தம் நட்சத்திரம் 01.54 வரை பிறகு சித்திரை.

இன்று நாள் முழுக்க சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்றைக்கு மகிழ்ச்சி தரும் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் நலம் சீராகும். ஒரு சிலருக்கு புதிய வேலை கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டு. வருமானம் உயரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று மனதில் தேவையற்ற குழப்பங்களை வேதனைகளை சந்திக்க நேரும். உடன்பிறந்த சகோதர சகோதரி உடன் மனஸ்தாபம் ஏற்படும். அலுவலகங்களில் வீண் பிரச்சினை வரும். தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தாலும் லாபம் உண்டு . இன்றைக்கு தெய்வ வழிபாடு நல்லதை தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்றைக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதை சமாளிக்க கடன் வாங்கும் நிலை வரலாம். பணவரவு இன்று சுமாராக இருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடி குறையும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட நேரும். பூர்வீக சொத்து மூலம் அனுகூலம் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று கடவுள் வழிபாடு காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக வாய்ப்பு உண்டு. சொந்த தொழில் செய்பவராக இருந்தால் இலாபம் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மூலம் வெளி மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதால் செலவு உண்டாகும். சேமிப்பு குறையும். புதிய முயற்சிகளுக்கு உங்களின் குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகங்களில் வேலை குறையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் . சொந்த பந்தகள் வழியாக நல்செய்திகள் வரும். அலுவலக வேலையாக ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் முயற்சியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே ந்லல காரியம் நடைபெற சிறு தடை உண்டாகி பின் அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை உங்களுக்கு முன்னேற்றம் தரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகளை பெற அங்கு வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.