இந்த ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும்! இன்றைய ராசி பலன் 18-01-2021 Today Rasi Palan 18-01-2021

0
213

 

இன்றைய ராசி பலன்- 18-01-2021,

நாள் : 18-01-2021,

தமிழ் மாதம்: 

தை 05, திங்கட்கிழமை

சுப ஹோரைகள்

மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இராகு காலம்:

காலை 07.30 -09.00

எம கண்டம்:

பகல் 10.30- 12.00

குளிகன்:

மதியம் 01.30-03.00

திதி:

பஞ்சமி திதி காலை 09.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.

நட்சத்திரம்:

பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.43 வரை பின்பு உத்திரட்டாதி.

 

மரணயோகம் காலை 07.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினை குறையும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வெளி வட்டார நட்பு கிட்டும். கடன்கள் குறையும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

 

 

Previous articleஇந்த ராசிக்கு இனிதொழிலில் இருந்த தடைகள் நீங்கும்! இன்றைய ராசி பலன் 15-01-2021 Today Rasi Palan 15-01-2021
Next articleஆட்டி படைக்கும் சனியின் பார்வையில் இருந்து விடுபடுவது எப்படி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here