இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! ஆரோக்கியத்தில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 19-11-2020 Today Rasi Palan 19-11-2020

0
221

 

இன்றைய ராசி பலன்- 19-11-2020

நாள் : 19-11-2020

தமிழ் மாதம்: 

கார்த்திகை 04, வியாழக்கிழமை, ,

நல்ல நேரம்: 

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 1.30 முதல் 3.00 வரை

எம கண்டம்: 

காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகன்:

காலை 9.00 முதல் 10.30 வரை

திதி:

பஞ்சமி திதி இரவு 09.59 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.

நட்சத்திரம்:

பூராடம் நட்சத்திரம் காலை 09.38 வரை பின்பு உத்திராடம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். எடுத்த காரியங்கள் பாதியில் தடைபடும். உங்கள் ராசிக்கு பகல் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியாக உங்கள் முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு பகல் 3.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.

மீனம்

மீனராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

Previous articleபுனேயில் ஒற்றை திரையரங்குகள் மூடப்பட்டது – ஏன் தெரியுமா?
Next articleசெலுத்தப்பட்டது அபராதத் தொகை! சசிகலா விரைவில் விடுதலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here