இந்த ராசிக்காரர்கள் இன்று தொழில் வியாபாரத்தில் வெற்றி ! இன்றைய ராசி பலன் 25-10-2020 Today Rasi Palan 25-10-2020

0
156

இன்றைய ராசி பலன்- 25-10-2020

நாள் : 25-10-2020

தமிழ் மாதம்:

ஐப்பசி 09, ஞாயிற்றுக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை.

இராகு காலம்: 

மாலை 4.30 முதல் 6.00 வரை

எம கண்டம்: 

மதியம் 12.00 முதல் 1.30 வரை

குளிகன்:

காலை 3.00 முதல் 4.30 வரை

திதி:

நவமி திதி காலை 07.42 வரை பின்பு வளர்பிறை தசமி.

நட்சத்திரம்:

அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.23 வரை பின்பு சதயம்.

மரணயோகம் பின்இரவு 04.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை.

மேஷம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

ரிஷபம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 3.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடித்தால் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 3.26 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.

துலாம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

தனுசு

இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.

மகரம்

இன்று எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு அமையும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் பழக்கத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

Previous articleபோராட்டமா நடத்துறிங்க…!ஆக்‌ஷனில் இறங்கிய ஆளுநர் மாளிகை…!
Next article25.10.2020 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here