இன்றைய ராசி பலன் 26-10-2020 Today Rasi Palan 26-10-2020

0
179

இன்றைய ராசிப்பலன் – 26.10.2020

நாள்: 26-10-2020, ஐப்பசி 10 , திங்கட்கிழமை,

திதி

தசமி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.

நட்சத்திரம்

நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. விஜய தசமி. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்– காலை 07.30 -09.00,

 எம கண்டம்– 10.30 – 12.00,

குளிகன்– மதியம் 01.30-03.00,

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும். இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே நீங்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாமல் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

Previous articleமக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!
Next articleபாடாய்படுத்தும் சர்க்கரை நோய் தீர இதை சாப்பிடுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here