இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை ! இன்றைய ராசி பலன் 27-10-2020 Today Rasi Palan 27-10-2020

Photo of author

By Kowsalya

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை ! இன்றைய ராசி பலன் 27-10-2020 Today Rasi Palan 27-10-2020

Kowsalya

இன்றைய ராசி பலன்- 27-10-2020

நாள் : 27-10-2020

தமிழ் மாதம்: 

ஐப்பசி 11, செவ்வாய்க்கிழமை

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 3.00 முதல் 4.30 வரை

எம கண்டம்: 

காலை 9.00 முதல் 10.30 வரை

குளிகன்:

மதியம் 12.00 முதல் 1.30 வரை

திதி:

ஏகாதசி திதி பகல் 10.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

நட்சத்திரம்:

சதயம் நட்சத்திரம் காலை 06.36 வரை பின்பு பூரட்டாதி.

நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 07.47-08.23 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.