இன்றைக்கு இந்த ராசிக்கெல்லாம் வியாபாரம் சிறப்பாகும் ! இன்றைய ராசி பலன் 05-01-2021 Today Rasi Palan 05-01-2021

0
207

 

இன்றைய ராசி பலன்- 05-01-2021,

நாள் : 05-01-2021,

தமிழ் மாதம்: 

மார்கழி 21, செவ்வாய்க்கிழமை

சுப ஹோரைகள்

காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இராகு காலம்: 

மதியம் 03.00-04.30

எம கண்டம்:

காலை 09.00-10.30,

குளிகன்:

மதியம் 12.00-1.30

திதி:

சப்தமி திதி பின்இரவு 04.04 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

நட்சத்திரம்:

உத்திரம் நட்சத்திரம் மாலை 06.20 வரை பின்பு அஸ்தம்.

அமிர்தயோகம் மாலை 06.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடையலாம்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வேலையில் பணிச்சுமை குறையும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புத்திர வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக சாதகமான பலனை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

 

மீனம்

 

மீன இராசிக்கு இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தூர பயணங்களால் லாபகரமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

Previous article20 சதவீதமாக யுரேனியம் செறிவூட்டப்படும் அளவு உயரும்… ஈரான்!
Next articleவிவசாயிகள் உடனான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! என்ன செய்ய போகிறது மத்திய அரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here