தலையில் பொடுகு அதிகரித்து விட்டதா? ஷாம்புவை தூக்கி போட்டுட்டு இதை யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

தலையில் பொடுகு அதிகரித்து விட்டதா? ஷாம்புவை தூக்கி போட்டுட்டு இதை யூஸ் பண்ணுங்க!!

ஆணோ,பெண்ணோ யாராக இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்தல்,இளநரை,பொடுகு,பேன்,தலை முடி வெடிப்பு போன்ற பல பாதிப்புகளை சந்திப்பது சாதாரண ஒன்றாகிவிட்டது.

இதில் பொடுகு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் தலைமுடி உதிர்வு,தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இதற்காக இரசாயனங்கள் நிறைந்த ஷாம்பு,எண்ணெயை பயன்படுத்துவதை முழுமையாக தவிருங்கள்.இதை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 500 மில்லி
2)நெல்லிக்காய் பொடி – 50 கிராம்
3)வேப்பம்பூ பொடி – 50 கிராம்
4)அதிமதுரம் சூரணம் – 50 கிராம்
5)பாரிஜாதப் பொடி – 50 கிராம்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அடுத்து 50 கிராம் நெல்லிக்காய் பொடியை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.இதனை தொடர்ந்து 50 கிராம் வேப்பம் பூ பொடி மற்றும் 50 கிராம் அதிமதுரப் பொடியை எண்ணெயில் கலந்து கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் இறுதியாக 50 கிராம் பாரிஜாதப் பொடி சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.

எண்ணெய் காய்ச்ச பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.சொல்லப்பட்டுள்ள அளவுப்படி வாங்கிக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை இரவில் தலை முழுவதும் அப்ளை செய்து மறுநாள் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி குளித்து வந்தால் பொடுகு பாதிப்பு அடியோடு நீங்கிவிடும்.

மேலும் வேப்ப இலை,வெந்தயப் பொடி போன்றவற்றையும் இந்த எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்கு பயன்படுத்தி வரலாம்.கெமிக்கல் கலந்த ஷாம்புவை பயன்படுத்துவதை தவிர்த்து இந்த எண்ணெயை உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.