கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!

Photo of author

By Pavithra

கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!

 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மற்ற அனைத்து இந்து கோவில்களும்,FSSAI என்ற உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் BHOG (Blissful Hygienic Offering to God) என்ற சான்றினை பெற வேண்டும்.BHOG என்றால் மகிழ்ச்சியாக கடவுளுக்கு சமர்பிக்கப்படும் தூய உணவு என்று அர்த்தம்.

இந்த சான்றிதழை கடந்த ஆண்டு,நெல்லையப்பர் கோவில், பாபநாசம் உலகநாதசுவாமி உள்ளிட்ட கோவில்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில் அனைத்து கோவில்களும் இந்த சான்றிதழை பெறவேண்டுமென்று,சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோவில் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் சீதாலட்சுமி,ஹோட்டல்கள்,அரசு மற்றும் தனியார் உணவகங்களில்,உணவு தயாரிக்கும் இடம் மிகவும் சுத்தமாக இருக்கின்றதா? என்பதனை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் பொங்கல், புளியோதரை,போன்ற பிரசாதங்களை செம்பு பாத்திரங்களில் தயாரிப்பதை தடுக்க வேண்டும். ஏனெனில் செம்பு பாத்திரத்தில் பிரசாதங்கள் செய்யப்பட்டால் அதில் உள்ள ரசாயனம் உணவில் கலந்து நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது.இதனால் கோயில்களில் தயாரிக்கப்படும் உணவு செம்பு பாத்திரத்தில் தயாரிக்கக் கூடாது என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்று கூறினார்.

மேலும் அனைத்து கோவில்களும் உணவு பாதுகாப்பு துறையின் வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
இல்லைன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஆட்சியர் சீதாலட்சுமி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.