அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்தா? புரளியை கிளப்பிய இயக்குனர் அதிரடி கைது!

Photo of author

By Sakthi

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மஞ்சுவாரியர் இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நடிகர் திலீபின் முன்னாள் மனைவிதான் மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், மலையாள திரைப்பட இயக்குனர் சணல் குமார் சசிதரன் என்பவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நடிகை மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்திருக்கிறது.

அவரை கந்துவட்டிக்காரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார். இவருடைய இந்த பதிவு மலையாள திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

ஆனால் மஞ்சுவாரியர் எப்போதும் போல வீட்டில் தான் இருந்திருக்கிறார். இதன் காரணமாக, மஞ்சுவாரியர் கொடுத்த புகாரினடிப்படையில் இயக்குனர் சணல் குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து மஞ்சுவாரியர் வழங்கிய புகாரில் தெரிவித்திருப்பதாவது சமூக வலைதளங்களில் தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்துவதாகும், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் சனல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்க்கெல்லாம் பின் தொடர்ந்து வந்து தன்னை தொந்தரவு செய்கிறார் என்றும், மஞ்சுவாரியர் குறிப்பிட்டிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே சணல்குமார் மீது அவர் கொடுத்த புகாரினடிப்படையில் வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளம் காவல்துறையினர் இயக்குனர் சனல்குமாரை கைது செய்திருக்கிறார்கள்.

அவரை கைது செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவையும், அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கின்றார் இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.