ஆபத்தான வெள்ளை சர்க்கரை! இதற்கு மாற்றாக இந்த 5 பொருட்களை பயன்படுத்துங்க !!

0
35
#image_title
ஆபத்தான வெள்ளை சர்க்கரை! இதற்கு மாற்றாக இந்த 5 பொருட்களை பயன்படுத்துங்க
உடலுக்குத் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதற்கு மாற்று பொருளாக இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் 6 பொருட்களை நாம் பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியம் பெறும். மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றான அந்த 5 பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
சர்க்கரைக்கு மாற்றான ஐந்து பொருட்கள்…
* பேரீச்சம்பழம்
* தேங்காய் சர்க்கரை
* பிரவுன் ரைஸ் சிரப்
* தேன்
* மேப்பிள் சிரப்
பேரீச்சம்பழம்…
உலர்ந்த பழ வகைகளில் ஒன்றான பேரீச்சம்பழம் இயற்கையான இனிப்பு சத்துக்களை கொண்டுள்ளது. பேரீச்சம்பழத்தில் கால்சியம் சத்துக்கள், வைட்டமின் கே, மெக்னீசியம், செலினியம், போலெட் போன்ற சத்துக்கள் இருக்கின்றது.
தேங்காய் சர்க்கரை…
தேங்காய் சர்க்கரையை நாம் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். தேங்காய் சர்க்கரை நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடிய சிறந்த இனிப்பு பொருளாகும். இந்த தேங்காய் சர்க்கரையானது தேங்காய் பனையின் பூ மூட்டுகளில் இருந்து வரும் தேனை வடிகட்டி தயார் செய்யப்படுகின்றது. இது பழுப்பு நிற சர்க்கரையை போல இருக்கும்.
பிரவுன் ரைஸ் சிரப்…
இந்த பிரவுன் ரைஸ் சிரப்பை நாம் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இந்த பிரவுன் ரைஸ் சிறப் பழுப்பு அரிசியின் நொதித்தலில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.
தேன்…
வெள்ளை சர்க்கரையை மாற்றாக சிறப்பான பொருள் நாம் தேனை பயன்படுத்தலாம். தேனில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. தேனை நாம் சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
மேப்பிள் சிரப்…
வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக நாம் மேப்பிள் சிரப் பயன்படுத்தலாம். இந்த மேப்பிள் சிரப் மிகுந்த சுவை கொண்டவை.