ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்!

Photo of author

By CineDesk

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்!

CineDesk

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விட்டதை அடுத்து முதல்கட்டமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 7ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்றும், இந்த படத்தின் போஸ்டர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகி இருப்பதாகவும், இந்த மொழிகளில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் அந்தந்த மொழிகளில் மோஷன் போஸ்டரை வெளியிடுவார்கள் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

ஒரு திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை ஒரே நேரத்தில் நான்கு பிரபல நட்சத்திரங்கள் வெளியிட இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

வரும் 2020ஆம் ஆண்டில் பொங்கல் தினத்தில் வெளியாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர்

அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது