சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக லைகா நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் திடீரென நேற்று ஒரு சில விநியோகஸ்தர்கள் தங்களுக்கு தர்பார் படத்தால் பெரும் நஷ்டம் என்றும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கேட்டு கூடினார்கள். இதனையடுத்து இன்று அவர்களை ரஜினியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் முழுவதுமாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு உள்ளதால் ’தர்பார்’ திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு வசூல் செய்தது என்ற முறையான கணக்கு உள்ளது. அதனால் பெரிய நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரும் நஷ்ட ஈடு கேட்டு வரவில்லை
ஆனால் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட திரையரங்குகளை உள்ளவர்கள் மட்டுமே தற்போது நஷ்ட ஈடு கேட்டு வந்திருக்கின்றனர். தர்பார் படத்தின் டிக்கெட்டை 100 முதல் 500 ரூபாய் வரை விற்று விட்டு வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே டிக்கெட் விற்றதாக அரசிடம் கணக்கு காட்டிவிட்டு, அந்த கணக்கின் படி தங்களுக்கு நஷ்டம் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறுவதாகவும் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது நஷ்டயீடு கேட்டால் தனக்கு கெட்ட பெயர் வரக் கூடாது என்பதற்காக ரஜினி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுத்து விடுவார் என்ற நோக்கத்திலும் மிரட்டும் வகையிலும் அந்த விநியோகஸ்தர்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது
உண்மையில் தர்பார் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும் நிலையில் ரஜினியை விநியோகஸ்தர்கள் மிரட்டுகிறார்கள? என்ற கேள்வி எழுந்துள்ளது