3 நாட்களுக்கு தரிசனம் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

3 நாட்களுக்கு தரிசனம் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

திருப்பதியில் எப்பொழுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையையொட்டி திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் குவிந்துள்ளது.

அதிகமான அளவில்  பக்தர்கள் இருப்பதால் இலவச டோக்கன் வழங்கும் இடத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் இலவச டோக்கன் இல்லாத பக்தர்கள், ஏழுமலையானின் தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்து இருகின்றனர். அது மட்டுமல்லாமல் 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் உள்ள  நீண்ட வரிசையில் கால் கடுக்க  நின்று தரிசனம் செய்கின்றனர்.

கோடை விடுமுறை காரணமாக, பக்தர்களின் கூட்டம் மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி தேவஸ்தானம்  “விஐபி “ தரிசனத்தை 3 நாட்களுக்கு ரத்து செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.