திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்!

Photo of author

By Parthipan K

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்!

Parthipan K

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்!

கொரோனா பரவலின் பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து அனைவரும் தங்களின் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது திருப்பதியிலும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

இதன் காரணமாக, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது.

அந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட இருபது நிமிடங்களுக்குள் ஒரு மாதத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிடுகின்றன. இதுதவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளொன்றுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க திருப்பதியில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில் தேவஸ்தானம் ஐஆர்சிடிசி மூலம் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 990 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதன் பின்னர் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளன்று திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும். ரூ.300 கட்டண தரிசனத்தில் அவர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.