இவர்களுக்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த புரட்டாசி மாதத்தில் அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்தனர். அதனால் திருப்பதி திருமலை தேவஸ்தானம் டைம் ஸ்லாட் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணிக்கு மூத்த குடிமக்களுக்கான தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. திருமலைக்கு நாள்பட்ட நோயாளி, வயதான பக்தர்கள் என அனைவருக்கும் தேவஸ்தானம் மாதம் தோறும் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் வரும் மார்ச் மாதத்திற்கான மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயாளிகள் போன்றவர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் இதை முன்பதிவு செய்து எளிதாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நாட்களுக்கான டோக்கன் ஒன்பது மணி முதல் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை கொடுத்து இலவசமாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் .
இந்த டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்காமல் ஏழுமலையான் கோவிலில் முன்வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.