தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்!
ஒவ்வொரு வருடமும் மைசூருவில் உள்ள அரண்மனையில் விஜயதசமி விழாவின் போது மைசூர் அரண்மனையில் வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொண்டாடப்படும். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை பார்க்க அந்த இடமே கோலாகலமாக இருக்கும். அவ்வளவு மக்கள் கூட்டம் கூடி இருப்பார்கள். அரண்மனையிலும் சரி, அதற்கு முன் அந்த ஊர்வலங்கள் செல்லும் இடத்திலும் சரி. அவ்வளவு ஊர் மக்கள் திரண்டு வரிசை கட்டி இருப்பார்கள்.
இந்த விழாவை பார்ப்பதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் அங்கு வந்து சேர்ந்து விடுகின்றனர். அந்த விழாவின் பொது ஊரே திருவிழா கோலம் பூண்டு இருக்கும். அதை பார்க்கவே நமக்கு கோடி கண்கள் வேண்டும். அவ்வளவு பிரம்மிப்பாக இருக்கும். அது அப்படியே ராஜா காலத்து வாழ்க்கை நம் கண்முன் காட்டுவதற்கு உதாரணமாக இருக்கும்.
யானைகளை வைத்து அந்த ஊர்வலம் நடத்துவதால் சாமுண்டீஸ்வரி தாயை யானையின் மீது வைத்து செய்யப்படும் ஊர்வலம் தான் விஜயதசமியின் சிறப்பே ஆகும். அங்கு ஒவ்வொரு வருடமும் அங்கு விஜயதசமி விழாவையொட்டி மைசூரு தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் நாள் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். ஜம்பு சவாரி என்பது யானைகளின் சவாரி ஆகும். இதில் தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனை சுமந்து செல்லும் யானை ராஜ நடையோடு செல்லும்.
அதன் பின்னால் மற்ற யானைகளும், அலங்கார ஊர்திகளும், பல்வேறு கலை குழுவினரும் அணிவகுத்து பின்தொடர்ந்து செல்வார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டவர்களும், லட்சக்கணக்கான மக்களும் கூடி பங்கேற்பார்கள். இதனால் மைசூரின் தசரா விழா உலக அளவில் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த விழா கடந்த வருடம் கொரோனாவின் காரணமாக மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு அந்த விழாவை கொண்டாடுவது குறித்து, பெங்களூரு விதான சவுதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில், உயர்மட்டக்குழு கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.