திடீர் திருப்பம் முக்கிய கட்சி வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பானது தமிழகம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக நடைபெற்று வருகிறது.
ஆளுங்கட்சியான அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ஒரே தினத்தில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைமை நேர்காணல் நடத்தி இருக்கிறது அதே போல எதிர் கட்சியான திமுக நான்காவது தினமாக இன்றைய தினமும் நேர்காணல் நடைபெற்று வருகின்றது.

இந்த சூழ்நிலையில், சட்டசபைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக விருப்பமான அளிப்பதற்கு மார்ச் மாதம் பத்தாம் தேதி வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்சமயம் மார்ச் மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு மார்ச் மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும் என அந்தக் கட்சியின் தலைமை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை அறிவித்து இருக்கின்ற அறிவிப்பு ஒன்றில், தமிழகம் மற்றும் புதுவையில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து தலைமை கழகத்தில் சென்ற 3ஆம் தேதி முதல் நம்முடைய கழகத்தின் சார்பாக வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு கேட்கும் அனைவருக்கும் விருப்பமும் வழங்கப்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில், நம் கட்சியின் சார்பாக போட்டியிட வாய்ப்பு கேட்கும் அனைவருக்கும் 7 -3 – 2021 ஞாயிற்றுக்கிழமை வரையில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அன்று மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதனையடுத்து விருப்ப மனு கொடுத்த அவர்களுக்கான நேர்காணல் வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.