பொதுவாக மாமியார்- மருகள் உறவு என்றாலே ஏழாம் பொருத்தம் என எல்லோரும் சொல்வார்கள். லட்சத்தில் ஒரு மாமியார் – மருமகளுக்கு இடையே நல்ல உறவு இருக்கும். அதாவது மருமகளை மகள் என மாமியாரும், மாமியாரை அம்மா போல பார்க்கும் மருமகளும் அமைவார்கள். பெரும்பாலும் மாமியார் – மருகள் சண்டை என்பது எல்லா வீட்டிலும் இருக்கும். முன்பெல்லாம் கூட்டு குடும்பம் இருந்தது.
மாமியார் சொல்வதை மருமகள் கேட்கமாட்டர். மருமகள் சொல்வதை மாமியார் புரிந்துகொள்ள மாட்டர். இது சம்பந்தப்பட்ட ஆணுக்கு பெரும் தலைவலியாகவே இருக்கும். அம்மாவிடமும் சொல்லி புரிய வைக்க முடியாமல், மனைவியையும் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் பிரச்சனை கோடிக்கணக்கான ஆண்களுக்கும் இருக்கிறது.
மாமியாருடன் வாழ பிடிக்காமல் கணவரை தனிக்குடித்தனம் கூட்டி செல்லும் பெண்களே இங்கு அதிகம். இந்நிலையில்தான் தனது மாமியாரின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய்க்கு மருமகள் பரிசு கொடுத்த சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ராஜோலு நகர சேம்பர் ஆப் காமர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசனின் மனைவி பவானி.
பவானி சமீபத்தில் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழா அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பவானியின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அப்போது பவானியின் மருகள் ஸ்ரீரங்கநாயகி மாமியர் பவானிக்கு தலா 100 கிராம் எடையுள்ள 2 தங்க பிஸ்கட்டுகள், 28 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ், 50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் 50 காசுகள் ஆகியவற்றை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார். இதன் மொத்த மதிப்பு ஒரு கோடி என சொல்லப்படுகிறது. மாமியாரும் மருமகளும் எப்போதும் சண்டை போட்டு கொண்டிருக்கும் இந்த காலத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள மாமியாருக்கு மருமகள் கொடுத்திருப்பது அந்த பகுதியில் ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.