இறந்த தாய் மீண்டும் உயிரெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அவரது மகள் பிராத்தனை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் பாலக்காடு என்னும் மாவட்டத்தில செருவலச்சேரியை சேர்ந்தவர் கவிதா. அவர் ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வந்தார். அவரும் அவர் தாயார் ஓமவனாவும் தனியாக வசித்துவந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தாயும், மகளும் கிறிஸ்துவ மதத்திற்கு இணைந்தனர். இதனால் உறவினர்கள் உறவை துண்டித்துக் கொண்டனர்.
கவிதா தாயாருக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். தீவிர மத நம்பிக்கை கொண்டவள் கவிதா, தனது தாயார் உயிர் திரும்புவார் என்னும் நம்பிக்கையில் அவர் சடலத்தை 3 நாட்கள் வைத்து தீவிர பிரார்த்தனை செய்தார்.
இச்சம்பவம் நடந்தது யாருக்கும் தெரியாது, இந்நிலையில் தினமும் கவிதா பயணம் செய்யும் ஆட்டோக்காரர் ஒருவர் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதனை அறிந்த போலீசார் ஓமனா வீட்டிற்கு வந்து அவர் சடலத்தை பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவரது மகள் கவிதாவிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.