தவெக மாநாடு இந்த இடத்தில் தான்.. வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Photo of author

By Rupa

தவெக மாநாடு இந்த இடத்தில் தான்.. வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ் திரையுலகை விட்டு முழு பணியாக அரசியலில் இறங்குவதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பெருமைப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் கொடி சின்னமானது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றை விஜய் தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முதற்கட்ட வேலையாக கட்சி மாநாடு நடத்தப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தவெக கட்சியின் மாநாடானது திருச்சி அல்லது சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இறுதியில் திருச்சியில் நடைபெறும் என்று கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலரும் கூறி வந்தனர். ஆனால் தற்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற இருப்பதாக கூறுகின்றனர். இரண்டாம் கட்ட மாநாடு திருச்சி அல்லது சேலத்தில் அரங்கேறலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் எந்த தேதி என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.மாறாக விக்கிரவாண்டி தொகுதியில் சூர்யா கல்லூரி அருகே நடைபெற இருப்பதாக கூறுகின்றனர்.இந்த மாநாட்டில் எந்த அளவிற்கு விஜய்க்கு வரவேற்பு கிடைக்கிறதோ அதை வைத்து அரசியலில் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்குமென கூறுகின்றனர்.