தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்த நிலையில், இம்மாநாட்டில் இக்கட்சியின் கழகத் தலைவர் விஜய் அவர்கள் திமுகவினரையும் பாஜகவினரையும் குறிப்பிட்ட பேசியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து திமுக சார்பிலும் பாஜக சார்பிலும் பல விமர்சனங்களும் கண்டனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இவற்றிற்கு தன்னுடைய தரப்பில் இருந்தும் விஜய் அவர்கள் பதில் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் கழகத் தலைவர் விஜய் அவர்கள் பேசியதற்கு துணை முதலமைச்சரிடம் பதில் கேட்கப்பட்டது. துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இதற்கு ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து திமுகவினர் சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர். எம்ஜிஆர், தொடங்கி ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான் என திமுகவை விமர்சனம் செய்ய ஆயிரம் பேர் புறப்பட்டாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஒற்றை வரியில் அளித்த பதில் பின் வருமாறு :-
செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் விஜயின் மாநாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,”எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை’ என ஒரே வரியில் கூறி முடித்துக் கொண்டார்.