ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சதம்: பரிதாபத்தில் பாகிஸ்தான் பவுலர்கள்

Photo of author

By CineDesk

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சதம்: பரிதாபத்தில் பாகிஸ்தான் பவுலர்கள்

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனையடுத்து இன்று தொடங்கிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர்களில் வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவர் தற்போது 166 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார் என்பதும் இவருடைய ஸ்கோரில் 19 பவுண்டரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 14 ரன்களில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தாலும் அதன் பின்னர் களமிறங்கிய லாபுசாஞ்சே அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இவர் தற்போது 126 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் அதில் 17 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுக்களை எடுக்க முடியாமலும், ரன்களை கட்டுப்படுத்த முடியாமலும் திணறி வருகின்றனர் குறிப்பாக யாஷிர் ஷா என்பவரின் 14 ஓவர்களில் 87 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்டிலும் பாகிஸ்தான் அணி திணறி வருவதால் தோல்வி அல்லது இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.