மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு !

Photo of author

By Savitha

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு !

Savitha

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கடந்த காலங்களில் தினமும் 100-க்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 400-ஐ கடந்துள்ளது.

மதுரையிலும் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதன்படி மதுரையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேற்றும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்பால் மதுரையில் 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

ஒரு சிலர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

அங்கு 34 படுக்கைகளும், தேவையான மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.