மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது!
விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரிடம் வருமான வரித்துறை நடந்து கொண்டது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே வந்ததால் ரெய்டு முடிந்த அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளில் குறைபாடு இருப்பதாகக் கூறி வருமானவரித்துறை அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது ரஜினிகாந்த் தான் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்ததாகவும் அதில் வாராக் கடனாக 1.7 கோடி ரூபாய் ஏற்பட்டதால் தனக்கு நஷ்டம் ஆகி விட்டதாகவும் கணக்கு காட்டியதாக தெரிகிறது. இதை ஏற்று வருமான வரித்துறை வழக்கை வாபஸ் பெற்றது. அதனால் விஜய் மற்றும் ரஜினி சம்மந்தப்படட் இரு வழக்குகளிலும் வருமான வரித்துறைக்குப் பின்னால் பாஜக இருப்பதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் இப்போது இந்த விவகாரம் மக்களவை வரை சென்றுள்ளது. மத்திய அமைச்சரான தயாநிதி மாறன் ‘ரஜினிக்கு மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் வரை வரிச்சலுகை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விஜய் குறி வைக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். இது எந்தவிதத்தில் நியாயம்.’ எனக் கூறியுள்ளார். தயாநிதி மாறனின் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியை வைத்துப் படம் ஒன்றைத் தயாரித்து வரும் வேளையில் அவருக்கு எதிராக பேசியுள்ளது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.