கண்திருஷ்டி போக்கும் வெட்டிவேர் சூரிய சக்கரம்! முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்!

0
825

கண்திருஷ்டி போக்கும் வெட்டிவேர் சூரிய சக்கரம்! முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்!

இரவு பகலாக பணம் சம்பாதித்தாலும் அவை கையில் தங்குவதில்லை. இதில் சிறிதளவு கூட சேமித்து வைக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கும் இருந்து வருகிறது.

பணம் தான் பிரச்சனையாக இருக்கின்றது என்றால் பணத்தையும் தாண்டி பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். இதனால் மனநிம்மதி பறி போகிறது. மேலும் டென்ஷன், கவனக்குறைவு, வேலையில் நாட்டமின்மை என பல்வேறு பிரச்சனைகள் நம்மை அறியாமையிலேயே நம்மை ஒட்டிக் கொள்கிறது.

இவ்வாறு காரணமே இல்லாமல் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு உங்களை சுற்றியுள்ள கண்திருஷ்டி காரணமாக அமையும். ஒருவரிடம் கண்திருஷ்டி இருந்தால் பணம் சார்ந்த பிரச்சனைகள் அவர்களிடம் நிறையவே இருக்கும்.

வெட்டிவேர் மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது. வெட்டிவேர் குளிர்ச்சியை தருவதுடன் நல்ல நறுமணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. ஆன்மீக ரீதியாகவும் வெட்டிவேர் நிறைய விஷயங்களை செய்யும். ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வெட்டிவேர்.

கண்திருஷ்டி நீங்கவும்.நல்ல சக்திகள் வீட்டிற்குள் வரவும்.பணவரவு தடையின்றி நடைபெறவும்.வருமானம் பல மடங்கு பெருகவும்.தொழில் விருத்தி அடையவும் உதவுகிறது.

வீட்டிலும் சரி, தொழில் செய்யும் இடங்களிலும் சரி வெட்டிவேர் அல்லது வெட்டிவேரால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்தால் பணம் சரளமாக உங்கள் கையில் புழங்க துவங்கும்.

வெட்டிவேர் சூரிய சக்கரம் :வெட்டிவேர் சூரிய சக்கரத்தை வாங்கி வீட்டின் வாசல் நடுப்பகுதியில் தொங்கவிட வேண்டும். இதனால் கண்திருஷ்டி குறையும்.

உங்களின் வாகனத்திலும் வெட்டிவேர் சூரிய சக்கரத்தை வாங்கி கட்டுவதன் மூலம் விரய செலவுகள் குறையும்.

ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்து உள்ளவர்கள் வெட்டிவேர் சூரிய சக்கரத்தை வாங்கி வீட்டிலும், அலுவலகத்திலும் பயன்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கையும், நிர்வாகத்திறமையும் மேம்படும்.

Previous articleம்ம் செம!.. சுலபமாக சமைக்கலாம் இந்த க்ரீன் சன்னா பிரியாணி!..
Next articleமனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here