இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

Photo of author

By Parthipan K

இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

Parthipan K

 

இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்து போனால் அவர்களுக்கு சரியான திதி, கொடுத்து வருவது பழங்கால வழக்கமாக உள்ளது. ஓராண்டு வரை அவர்களுடைய நினைவும் அவர்கள் கனவில் வருவது போன்ற விஷயங்களும் அவ்வபோது நெருங்கிய உறவுகளுக்கு வருவது உண்டு. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் உங்கள் கனவில் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?

இறந்து போனவர்களுக்கு படையல் வைத்து வழிபடுவதால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.சில பேர் அவர்களுடைய திதியை மறந்து விட்டு இறந்தவர் எந்த தேதியில் இறந்தார்கலோ அந்த தேதியில் படையல் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசை தோறும் படையல் வைத்து வழிபடுவது பித்துருக்களுக்குரிய விசேஷ நாட்களில் திதி கொடுத்து வருவது போன்ற விஷயங்கள் தவறாமல் செய்து வருவதால் குடும்பத்தில் எப்பொழுதும் நன்மைகள் நிலைபெறும்.

ஒரு மனிதன் இறந்து போன அந்த நாளில் எந்த திதி இருக்கிறதோ அதே திதி அடுத்த ஒவ்வொரு வருடத்திலும் வரக்கூடிய நாளில் திதி கொடுப்பது தான் முறையான பித்ரு வழிபாடு ஆகும். ஒருவர் ஆனி மாதம் அஷ்டமி திதியில் இறந்து போனால் அடுத்த வருடம் ஆனி மாதம் வரக்கூடிய நினைவு தேதி அன்று வேறொரு திதி இருக்கும். அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாகவோ அந்த அஷ்டமி திதி கண்டிப்பாக வரக்கூடும்.

அந்நாளில் தான் அவர்கள் பூமியிலிருந்து சொர்கலோகத்திற்க்கு அனுப்பப்படுகிறார்கள்.அந்நேரத்தில் தான் அவர்களுக்கு பசியும் தாகமுமாக இருக்கும் அவருக்கு அந்த நாளில் தான் நீங்கள் முறையாக எள்ளும், தண்ணீரும் படைத்து திதி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த எல்லா உணவு வகைகளையும் படைத்து படையல் வைத்து முறையாக வழிபட்டு காலத்திற்கு சாதம் வைக்க வேண்டும். அந்த உணவை காகம் எடுத்த பின்பு தான் அவருடைய மூத்த மகன் உணவை உட்கொள்ள வேண்டும்.

இதை செய்ய தவறும் பொழுது உங்களுடைய கனவில் அவர்கள் தோன்றாமல் போவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இறந்தவர்களை ஓராண்டுக்கு மேல் யாரும் நினைத்து பார்க்க மாட்டார்கள். பித்ருக்கள் என்பவர்கள் எப்பொழுதும் நம்மை விட்டு நீங்குவது இல்லை. அவர்கள் வேறொரு பிறவி எடுத்தாலும் இப்பிறவியில் இருக்கும் இந்த ஆத்மாவானது உங்கள் குடும்பத்தை தான் சுற்றி கொண்டிருக்கும்.

மேலும் அவர்களுக்கு உரிய பூஜை புனஸ்காரங்களை செய்வது கடைபிடித்து வருபவர்களுக்கு கட்டாயம் எவ்விதமான பிரச்சனைகளும் வாழ்வில் ஏற்படுவது இல்லை. வம்சம் விருத்தியடையும். குலம் செழிக்கும் இந்த பித்ரு வழிபாடு என்பது வாழ்வில் முக்கியமான வழிபாடு ஆகும். எனவே இதனை தவறவிடாமல் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் அவர்கள் மனதில் இருப்பதை உங்கள் கனவில் வந்து நிச்சயமாக கூறி விட்டு செல்வார்கள்.