வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவைகளுக்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி வரையில் கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா வைரஸ் பதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள இந்த ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 17 ஆம் தேதியிலிருந்து வரும் 31 ம் தேதி வரை சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் உள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள இந்த ஊரடங்கால் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, பொது போக்குவரத்து வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கட்டுவது உள்ளிட்டவைகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இது போன்ற பணிகளை செய்ய முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கு எல்லாம் ஆறுதல் அளிக்கும் விதமாக மத்திய அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, இன்சுரன்ஸ் மற்றும் லைசன்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரையில் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அவற்றை ஜூலை 31 வரையில் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எந்த வித அபராத கட்டணம் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.