நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Parthipan K

Updated on:

Deadline is the day after tomorrow! Important information released by the government about the connection of Aadhaar number with electricity!

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து மின்வாரியத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.அந்த வகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை  இணைக்க வேண்டும் அப்போது தான் அரசால் வழங்கப்படும் 100 யூனிட் மின்சார மானியத்தை  தொடர்ந்து பெற முடியும் என அறிவிக்கப்பட்டது.

அதனால் மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த பணியானது முடிவடையவில்லை அதனால் மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள்  கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டார்.

ஆனாலும் கடந்த மாதம் இறுதியில்  5 சதவீத பேர் மின் இனைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் மீண்டும் 15 நாட்களுக்கு காலவகாசம் வழங்கப்பட்டது.நாளை மறுநாள் இந்த அவகாசம் முடிவடைய உள்ளது. அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்கள் உடனடியாக விரைந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தி வருகின்றது.