TAMIL NADU:தமிழ்நாட்டில் மட்டும் கடந்த பத்து மாதங்களில் புதிதாக சுமார் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆய்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் அரசு வரும் 2025 ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் காசநோய் ஒழிக்க மாநில அரசுகள் பல முயற்சி செய்து வருகிறது. மேலும் நடமாடும் ‘ஸ்கேன்’ கருவிகளையும் வீடுகளுக்கு அனுப்பி ‘ஸ்கேன்’ எடுக்கப்படுகிறது.
இது போன்ற நடவடிக்கைகளால் காச நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையில் குணமடைகின்றன. இந்த நிலையில் சுகாதாரத்துறை ஆய்வு செய்ததில் நடப்பாண்டில் நாடு முழுவதும் 21 லட்சத்துக்கு காசநோய் இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. அதில் தனியார் மருத்துவமனையில் 25,685 பேரும் அரசு மருத்துவமனையில் 50,837 பேரும் சிகிச்சை பெற்றுள்ளார்.
மேலும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகமாக இருந்தது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் காசநோய் தடுப்பதற்கான அனைத்து முறைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது.