கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

Photo of author

By CineDesk

கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

CineDesk

Deaf disabled protest in the collector's office!

கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

சேலம் மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அருகே நேற்று காத்திருந்து போராட்டத்தை நடத்தினர். மாநில பொது செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு, துணை தலைவர் காளி சான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

சைகை மொழி பெயர்ப்பாளர் ரோகிணி கோரிக்கையை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது வெயிலில் கொளுத்தியது வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி காது கேளாதவருக்கு வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டில் உள்ளவர்கள் தொகுப்பு வீடு வழங்க வேண்டும்.

மாதந்திர உதவி தொகையை வருவாய்த்துறையில் இருந்து மாற்றி மாற்று திறனாளிகள் துறை மூலம் ரூபாய் 3000 உயர்த்தி வழங்க வேண்டும். வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றத்தினர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் பணி நியமனம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும்.

எங்களின் சைகை மொழியை விரைந்து அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோர்வையை வாசங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி நிற்கின்றனர். போராட்ட சங்கத்தின் துணைச் செயலாளர் அயூப், பொருளாளர் பாட்ஷா உட்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் கல்வி நிலையங்களில் சைகை முடி அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

அனைத்து கல்வி நிலையங்களில் அனுபவிக்க செய்கை மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கோரிக்கையை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலக அதிபர் இடம் வழங்கினர்.