மேஷ ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது தெரிந்து கொள்ளுங்கள்!

Photo of author

By Parthipan K

மேஷ ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பதிவின் மூலம் வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரவிருக்கும் சனி பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம். தை மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார்.

சனி பகவான் எப்பொழுதும் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் பயணம் செய்வார். மேஷ ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சியினால் தைரியம் அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரக்கூடியதாக அமைய உள்ளது.

ஆறாம் இடத்தில் உங்களின் நட்சத்திரத்திற்குரிய செவ்வாய் கிரகத்தில் சனி பகவான் பயணம் செய்கின்றார். இவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். சனியும் ராகவும் இணையும் பொழுது உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும்.

தொழிலில் வெற்றி கிடைக்கும். இனி வரும் காலங்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மையாகவே அமையும். சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது படுவதால் திருமண தடைகள் நீங்கும்.

போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவ மாணவிகள் முயற்சி செய்தால் வெற்றி அடையலாம். குறிப்பாக ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு உடல் நலம் மேம்படும். குலதெய்வத்தை வழிபடுவதனால் நன்மை கிடைக்கும்.