Breaking News

கண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!!

Dear dear!! An amazing video of the lander orbiting the lunar exploration rover!!

கண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!!

விக்ரம்  லேண்டரின் பாதுகாப்புடன் ரோவர் ஆராய்ச்சி செய்யும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நிலவின்  தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் – 3 விண்கலம் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம்  லேண்டெர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதன் பின்னர் அதில் இருந்து பிரக்யான் ரோவரும் வெளியேறி நிலவைத் தற்போது  ஆராய்ச்சி செய்து வருகிறது.

தற்போது  நிலவை  இன்ச் பை இன்சாக ஆய்வு செய்து வரும் ரோவர் ஏராளமான புகைப்படங்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வருகிறது.புதிய புதிய உண்மைகளை தற்போது அனுப்பி வரும் ரோவர்  நிலவில் சல்பர் இருப்பதை  தற்போது உறுதி செய்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் 14 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படும் என்பதால் சோலார் பேனல்களில் லேண்டெர் மற்றும் ரோவர் சூரிய ஒளியை பயன்படுத்தி ஆய்வு செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ரோவரானது  லேண்டரின் கண்காணிப்புடன் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  ரோவரை தனது குழந்தையை போல விக்ரம் லேண்டர் பாதுகாத்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “பாதுகாப்பான பாதையை தேடி ரோவர் சுழற்றப்பட்டுள்ளது. ரோவரின் இந்த சுழற்சி லேண்டர் இமேஜர் கேமராவின் மூலம் படம் பிடிக்கப்பட்டது. சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாட்டு தனமாக உல்லாசமாக இருப்பதை தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு என்று தெரிவித்துள்ளது.