மிதுனம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

Photo of author

By Parthipan K

மிதுனம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பதிவின் மூலம் வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரவிருக்கும் சனி பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம். தை மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு சனி பெயர்ச்சி ஆகின்றார்.

மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிவடைந்து ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதனால் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறந்து புது நம்பிக்கையுடன் வெற்றி கிடைக்கும். சனிபகவான் அமரக்கூடிய இந்த ஒன்பதாம் இடமானது தெய்வீகம் உணர்வு, நம்பிக்கை, வெற்றி, செல்வம் சேர்த்தல் பாவம் நீங்குதல் போன்றவைகள் ஏற்படும்.

குறிப்பாக நீங்கள் நினைத்தது நிறைவேற கூடிய காலமாக இவை அமையும். எட்டாம் இடத்தில் சனிபகவான் இருந்ததனால் உங்களுக்கு திருமண தடை திருமணத்தைப் பற்றி பேச்சுவார்த்தை எடுத்தாலே அவை தடங்களில் முடிந்தது போன்றவைகள் நிகழ்ந்து.

தற்போது ஒன்பதாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதனால் திருமண தடை நீங்கி உங்களுக்கு பிடித்தவாறு திருமணம் நடைபெறும். மாணவர்களை பொறுத்தவரையில் தடம் மாறிய கல்விகள் சீராக அமையும்.

தேர்வுகளில் நல்ல தேர்ச்சியுடன் வெற்றி பெறுவார்கள். இத்தனை நாள் இருந்து வந்த உடலில் ஏற்பட்டுள்ள உபாதைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியம் அடைவீர்கள். அஷ்டமத்து சனி முடிவடைவதனால் திருநள்ளாறு சென்று சாமி தரிசனம் செய்வது மிகச் சிறந்ததாக அமையும்.