ICICI வங்கி கஸ்டமர்களே.. டெபிட் கார்டு விதிமுறையில் அதிரடி மாற்றம்!!
இந்தியாவில் செயல்பட்டு வரும் முக்கிய வங்கிகள் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கும் நிலையில் ICICI வங்கி தனது வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு விமான நிலைய லவுஞ்ச்சில் சில மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது.
வருகின்ற அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது.
கடந்த சில மாதங்களாக பல்வேறு வங்கிகள் தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ள நிலையில், ஐசிஐசிஐ வங்கியும் தனது டெபிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.அக்டோபர் 1 முதல் விமான நிலைய லவுஞ்ச் சேவைகளை 2 முறை மட்டுமே இலவசமாகப் பெற முடியும் என்பது தான் புதிய விதிமுறை.
அதாவது அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் காலாண்டில் இலவச லவுஞ்ச் பெற டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஜூலை,ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் காலாண்டில் ரூ.10,000 செலவிட்டு இருக்க வேண்டும்.இந்த விதிமுறை அடுத்த காலாண்டுகளுக்கும் பொருந்தும் என்று ICICI தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கியின் இந்த புதிய விதிமுறையால் டெபிட் கார்டு பயனர்கள் தங்கள் செலவினங்களை புதிதாக திட்டமிட்ட வேண்டும்.
இலவச விமான நிலைய லவுஞ்ச் அணுகலைப் பெறுவதற்கான புதுப்பிக்கப்பட்ட நிபந்தனைகள் கோரல் பேவேவ் டெபிட் கார்டு,எக்ஸ்பிரஷன்ஸ் பிசினஸ் மாஸ்டர்கார்டு டெபிட் கார்டு,ரூபே கோரல் டெபிட் கார்டு,பவள வணிக மாஸ்டர்கார்டு,எக்ஸ்பிரஷன்ஸ் பேவேவ் டெபிட் கார்டு
எக்ஸ்பிரஷன்ஸ் பிசினஸ் டெபிட் கார்டு,கோரல் மாஸ்டர்கார்டு,பேவேவ் எக்ஸ்பிரஷன்ஸ் டெபிட் கார்டு,கோரல் பேவேவ் பிசினஸ் டெபிட் கார்டு,எக்ஸ்பிரஷன்ஸ் கோரல் பிசினஸ் மாஸ்டர்கார்டு டெபிட் கார்டு உள்ளிட்ட டெபிட் கார்டுகளுக்கு பொருந்தும்.