ரிஷபம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

0
337

ரிஷபம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பதிவின் மூலம் வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரவிருக்கும் சனி பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம். தை மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு சனி பெயர்ச்சி ஆகின்றார்.

ரிஷப ராசிக்கு சனி பெயர்ச்சி எவ்வாறு இருக்கின்றது என தெரிந்து கொள்ளலாம். கும்ப ராசியில் இருக்கும் சனிபகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியையும் ஏழாம் பார்வையாக சிம்ம ராசியும் பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியும் பார்க்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானம் , சுகஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகிய இடங்களில் சனி பகவானின் பார்வை படுகின்றது.

சனிபகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு யோகக்காரராக உள்ளார். இப்போது அவர் அமர்ந்திருக்கும் ஸ்தானம் தொழில் ஸ்தானம். அதனால் உங்களுக்கு கூடுதல் யோகம் கிடைக்கும். தொழில் வேலை அனைத்தும் மேன்மை, அடையும்.

இந்த இரண்டரை வருடமும் தொட்டது தொடங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அவை பல மடங்காக பெருகும். உங்களை வேண்டாம் என நினைத்துச் சென்றவர்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள். வசதிகள் அதிகரிக்கும் உங்களை தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது . பிறமொழி பாடங்களை முதன்மையாக எடுத்துக் கொண்ட மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைவார்கள்.

மேலும் உங்களுக்கு புதிய சொத்துக்கள் நிலங்கள் வாங்கும் யோகங்கள் உண்டாகும். பரிகாரமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபட வேண்டும்.

சனிக்கிழமை அன்று உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று அசைவம் உண்பதை தவிர்க்க வேண்டும்.

 

Previous articleஇனி ஆயிரக்கணக்கில் ஆண்களின் அந்தரங்க பிரச்சனைக்கு செலவிட தேவையில்லை!! இந்த 1 போதும் நிரந்தர தீர்வு!!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here