DEATH DREAM: உங்கள் துணை இறப்பது போல் கனவு வந்தால்.. இது தான் நடக்கும்!!

Photo of author

By Rupa

DEATH DREAM: உங்கள் துணை இறப்பது போல் கனவு வந்தால்.. இது தான் நடக்கும்!!

Rupa

DEATH DREAM: If you dream of your partner dying.. this is what will happen!!

DEATH DREAM: உங்கள் துணை இறப்பது போல் கனவு வந்தால்.. இது தான் நடக்கும்!!

பொதுவாக நாம் உறங்கும் பொழுது கனவுகள் வருகிறது.இதில் லாஜிக் கனவுகள்,லாஜிக்கே இல்லாத கனவுகள்,வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட கனவுகள் என்று பல கனவுகள் இருக்கிறது.

நல்ல கனவுகள்,கெட்ட கனவுகள் எவையும் நாம் முடிவு செய்து வருவதில்லை.நிஜத்தில் நாம் ஏங்கி கொண்டிருக்கும் விஷயங்களை கனவில் கண்டால் அது மறக்க முடியதா கனவாக இருக்கும்.அதேபோல் நமக்கு பிடித்தவர்கள்,வாழ்க்கை துணை இறப்பது போல் கனவு வந்தால் பழித்துவிடுமோ என்று அதை நினைத்து அதிக அச்சம் கொள்வீர்கள்.

நமக்கு பிடித்த ஒருவர் இறப்பது போன்று கனவு வந்தால் அவரது வாழ்வில் விடாது துரத்திக் கொண்டிருந்த கஷ்டங்கள் அவரை விட்டு நீங்கப் போகிறது என்று அர்த்தம்.துன்பம் விலகி இன்பம் கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

அதேபோல் உங்களுக்கு நெருக்கமானவர் இறப்பது போன்று கனவு வந்தால் அவரை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.தங்கள் வாழ்க்கை துணை(கணவன்-மனைவி) இறப்பது போன்று கனவு வந்தால் அதுவும் நன்மையே கொடுக்கும்.

கணவன் கனவில் மனைவி இறப்பது போன்று தோன்றினால் அது மனைவி தன் வாழ்வில் சந்தித்து வந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.அது மட்டுமின்றி இந்த கனவு வந்தால் மனைவிக்கு ஆயுள் விருத்தி உண்டாகும்.

அதேபோல் மனைவியின் கனவில் கணவன் இறப்பது போன்று தோன்றினால் அது கணவனின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.கணவன் தன் வாழ்வில் சந்தித்து வந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.அது மட்டுமின்றி இந்த கனவு வந்தால் கணவனின் ஆயிள் விருத்தி உண்டாகும்.