கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பருவமழையும் பெய்ய தொடங்கி விட்டது.இந்த பருவமழை காரணமாக அசாம்,மேகாலயா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் கனமழை காரணமாக அந்த மாநிலங்களின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் மீட்பு குழுவினர் அமைத்து தாயார் நிலையில் உள்ளது.
இதனை அடுத்து பீகார் மாநிலத்தில் நேற்று இடியால் மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.