வெறித்தனமாக வைரலாகும் மாஸ்டர்  படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும்  இருக்கும் மரண மாஸ் போஸ்டர்!! 

Photo of author

By Parthipan K

வெறித்தனமாக வைரலாகும் மாஸ்டர்  படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும்  இருக்கும் மரண மாஸ் போஸ்டர்!! 

Parthipan K

இளைய தளபதியின் அடுத்த படமான மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த படம் OTT தளத்தில் வெளியிடாமல் தியேட்டரில்தான் வெளியிடப்படும் என்ற அறிவிப்புடன் இந்த படத்தில் நடித்துள்ளார் அனைத்து நட்சத்திரங்களும் ஒட்டுமொத்தமாக  இருக்கும் போஸ்டர் ஆனது ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படமானது சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் ஆகும்.

இந்தப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் கைகோர்த்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது மட்டுமல்லாமல் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா சாந்தனு, கௌரி கிஷன், விஜயின் சிறுவயது நண்பர்கள் பட்டாளம் மற்றும் அர்ஜுன் தாஸ் என பலரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் ஒரே போஸ்டரில்  இருக்குமாறு உருவாக்கப்பட்ட போஸ்டர் ஆனது ரசிகர்களால் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

இந்தப் படம் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தைப்போலவே OTT தளத்தில் வெளியாகப் போவதாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில் தளபதி இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.