தொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

Photo of author

By Vijay

தொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

Vijay

Updated on:

தமிழகத் தொல்லியல் துறையின் பிதாமகன் என போற்றப்படுபவர் அறிஞர் நாகசாமி. இவர் நேற்று முதுமை காரணமாக காலமானார் .அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகசாமி. தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பதவி ஏற்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் நேற்று மதியம் காலமானார்.

மறைந்த நாகசாமி தமிழின் சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், சமஸ்கிருதம் ,வேதங்கள், இதிகாசங்கள், மற்றும் சாஸ்திரங்களில் ஆழ்ந்த திறமை வாய்ந்தவர். தொல்லியல் துறையில் பணி புரிந்த பல அறிஞர்களுக்கும் களப் பயிற்சி அளித்த பெருமைக்குரியவர்..

வாழ்க்கை வரலாறு சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டமும், இந்திய கலையியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர். இந்திய கலை, தொல்லியல், கட்டடக்கலை, இலக்கியம், கல்வெட்டு, இசை, நடனம் மற்றும் தெற்காசிய கலைகளில் மிகவும் திறமை வாய்ந்தவராக காணப்பட்டார்.

தமிழகத்தில், பூண்டியில் வரலாற்றுக்கு முற்பட்ட கால அருங்காட்சியகம், ஆற்காட்டில் இஸ்லாமிய அருங்காட்சியகம் உள்ளிட்ட 12 அருங்காட்சியகங்களை உருவாக்கினார். தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு மற்றும் கலை சார்ந்த முதுகலை படிப்பை துவங்கினார்.