ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்!
முன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதா திடீர் உடல் நலக் கோளாறால் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு என்ன ஆனது என்பது மாநில மக்கள் அனைவருக்குமே தெரியாமலேயே போய் விட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் சட்டசபையில் இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும் இன்று சட்டசபையில் ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் வந்ததாக திமுக உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தை பற்றி பேசுவது சபை மரபு அல்ல என்றும், அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழக்கை விரைந்து முடிக்கத்தான் உறுப்பினர் சுதர்சனம் பேசியுள்ளார்.
அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று விளக்கம் அளித்தார். அது போல் மதியம் கொடநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரான பழனிச்சாமியிடம் மிகவும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் கொடநாட்டில் இருந்து தான் நாட்டின் அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
மேலும் கொடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென கழட்டப்பட்டது எப்படி என எதிர்க்கட்சித் தலைவரிடம் திடீரென ஒரு கேள்வியை எழுப்பினார். கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக சார்பில் நீங்கள் ஆட்சியில் இருந்த போதும், ஏன் கேமராக்கள் மாயமானது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் கொடநாடு விவகாரம் சாதாரண ஒரு விஷயமல்ல. இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று நீதிமன்றம் சென்று இருந்தீர்கள் என அவர் முகத்துக்கு எதிரேயே முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இதனால் அமைதியாகி எதிர்க்கட்சித் தலைவர் கொடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அங்கு பாதுகாப்பு தேவைப்படவில்லை. எனவே தரவில்லை என்றும், புலன் விசாரணை வேண்டாம் என கூறவில்லை வழக்கை நடத்துங்கள் என கூறி அமர்ந்து விட்டார்.