கடன் தொல்லையால் விபரீத முடிவு!

Photo of author

By Sakthi

குலையநேரி பகுதியில் வசித்து வரும் கண்ணன் சீதாலட்சுமி அழகிய தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தச்சு வேலை செய்து வரும் கண்ணனுக்கு வருமானம் பெரிய அளவில் கிடையாது.

அவர் சம்பாதித்து வரும் பணத்தை குடித்தே அழித்து விடுவார். அதோடு அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கியிருக்கிறார். ஆனாலும் கூட அவர் குடிப்பழக்கத்தை நிறுத்துவதாக இல்லை. இதன் காரணமாக தம்பதியர் இடையே தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்தது.

குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்காக சீதாலட்சுமி குவாரியில் கூலி வேலைக்கு சென்று வந்தார். இருந்தாலும் மறுபுறம் கடன் கொடுத்தவர்கள் கேட்க ஆரம்பித்ததால் ,குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், விஷம் குடித்த நான்கு பேரையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கண்ணன் உயிரிழந்திருக்கிறார்.

மற்ற மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சுரண்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.