டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டரின் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Gayathri

டிசம்பர் மூன்றாம் தேதியான நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையை அம்மாவட்ட கலெக்டர் வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார்.

 

தமிழகத்தில் அரசு விடுமுறைகள் தவிர்த்து பண்டிகைகள், முக்கிய உள்ளூர் திருவிழாக்கள் ஆகியவை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது உண்டு. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம், கன்னியாகுமரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, அன்றைய தினம் குறைந்த பணியாளர்களுடன் முக்கிய அரசு கருவூலகங்கள், அத்தியாவசிய பணிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை முழு பணிநாளாக செயல்படும் என்றும் டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.