அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

0
153

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் நிர்ணயித்து இருக்கின்ற தொகையினை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை தற்போது வரையில் இருந்து வருகிறது.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30 லட்சம் ரூபாயும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 77 லட்சம் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களுடைய செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

கடந்த 2014ஆம் வருடம் வேட்பாளர்கள் செலவின தொகை கடைசியாக நிர்ணயம் செய்யப்பட்டது, இந்த சூழ்நிலையில், வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாகனங்கள் பயன்படுத்துதல், விளம்பரங்கள் செய்தல், உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வேட்பாளர்களுக்கு கூடுதலாக செலவு ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, தேர்தல் செலவின தொகையை அதிகரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தார்கள், இதற்காக சென்ற வருடம் உமேஷ், ஹரிஷ் குமார் உள்ளிட்ட 2 பேர் கொண்ட சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 90 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரையில் செலவு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது, இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தீவிர பரிசீலனை செய்து வருகின்றது. இதற்கான அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு நாடாளுமன்றத் தேர்தல் செலவின தொகை அறிவிக்கப்பட்டால் அதனை பின்பற்றி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவின தொகை ரூபாய் 35 லட்சத்தில் இருந்து 38 லட்சமாக அதிகரிக்க படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

Previous articleஅப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
Next articleஉலக கோப்பையை கண்முன்னே கொண்டு வந்த 83! பயங்கர ட்ரெண்டிங் செய்யும் ரசிகர்கள்!