விவசாயிகளுக்கு அக்கவுண்டுக்கு வரும் ரூ 15000!! கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் உடன் கூடிய பம்பு செட்டுகளை வாங்க ரூ.15,000 – மோ அல்லது மின் மோட்டாரின் பம்புசெட்டின் மொத்த விலையில் இருந்து 50% சதவீதமோ இதில் எது குறைந்த தொகையில் உள்ளதோ அதை மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க நினைக்கும் விவசாயிகள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார்.

விவசாயிகளுக்காக பல மானியங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவை, விதைக்கான மானியம், உரத்திற்கான மானியம், பயிர்களுக்கு காப்பீட்டு தொகை, வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை என பல நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

இது மட்டுமன்றி, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன், விவசாயம் சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்களுக்கு மானியம் சார்ந்த கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆண் விவசாயிகள் என்று இல்லாமல் பெண் விவசாயிகளுக்கும் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள் வாங்கும் 50 சதவிகித மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க ரூ.15,000 மானியமும் வழங்க உள்ளதாக வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி அவர்கள் கூறியுள்ளார்.

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி அவர்கள் இந்த மானியம் குறித்து கூறிய விவரங்கள் பின்வருமாறு :-

பழைய திறன் குறைந்த பம்புசெட்டுகளை மாற்றி அமைக்க முடியாத நிலையில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என்றும், இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தில் சிறு, குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும் மானியத்தை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.